படைத்திறந்த்து பொழிந்தது உயிர் கொண்டு போனது
வான் படையென திறந்தது
தான் கொண்டதை எல்லாம் பெய்தது
மாண்டனர் சிலர், சிதறினர் பலர்
ஏன் இந்தக் கொடுமை
என் இனம் என் செய்தது?
சிகரத்திற்கு ஒர் அஞ்சலி
பாரில் அதி சிறந்தவன்
என் தமிழ்த்தலைவன்
காலத்தை வென்றவன்
40 வருடம் முன்னோக்கி சிந்தித்தவன்
அச்சமில்லை என்று உச்சிக்
குரலில் முரசிட்டவன்
பெண் விடுதலைக்கு தன்னையே
உதாரணம் காட்டியவன்
கண்ணம்மா மீது தன்
காதலை கொட்டியவன்
அந்தம் இல்லா அருவி போல்
கவிப்பால் ஊற்றியவன்
சித்திரமான தமிழ் தாய்க்கு
சற்றே அழகு சேர்த்தவன்
தமிழ்த்தாய் வரமாய் பெற்ற பாரதி
தாள் வனங்குகிறான் - இவன்